கோலாலம்பூர்:
மலேசியாவின் துணைப் பிரதமரான டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் (Datuk Seri Fadillah Yusof), 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், 2030-ஆம் ஆண்டிற்குள், 55 புதிய வெள்ளத் தணிப்புத் திட்டங்களை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது நடிகை, 2024 ஆம் ஆண்டு வரை, வெறும் 17 திட்டங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.
அதுமட்டுமின்றி, இந்தத் திட்டங்களின் மூலம், வெள்ளத்தில் இருந்து, ஒரு மில்லியன் மக்களைப் பாதுகாக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய வெள்ளத் தணிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவும், அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதில், இரண்டு பயன்பாடுகளைக் கொண்ட, நான்கு நீர்த் தேக்கக் குளங்கள், 12 புதிய ஒருங்கிணைந்த ஆற்றுப் படுகைகள் உட்பட, அமைப்புரீதியான, அமைப்புரீதியற்ற வெள்ளக் கட்டுப்பாடு நடவடிக்கைகளும் அடங்கும்.
இருப்பினும், அதிக செலவு, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், பயன்பாடுகள் மறுசீரமைப்பு போன்ற சவால்கள், திட்டங்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள, ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது, தளத்திலும், செயல்பாட்டிலும் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, மேம்பட்ட பாதுகாப்பு, பொருளாதாரத் நிலையை உறுதிப்படுத்தும் எனவும் ஃபடிலா கூறினார்.