கோலாலம்பூர்:
தேசிய தினம் மற்றும் மலேசியா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்து அபராதங்களுக்கு, கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தச் சலுகைகள், 2025 செப்டம்பர் 17 வரை கிடைக்கும் என்று, கோலாலம்பூர் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில், ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தேசிய மற்றும் மலேசியா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2025 செப்டம்பர் 17 வரை, போக்குவரத்து அபராதங்களுக்கு, சிறப்புச் சலுகைகள்” என்று, கோலாலம்பூர் மாநகராட்சி, தனது பதிவில் குறிப்பிட்டிருந்தது. இந்த அபராதங்களை, பே @கிஎல் (Pay@kl) மற்றும் பிடிபிபே (PBTPay) போன்ற, இணையச் சேவைகள் மூலமாகவோ, அல்லது கோலாலம்பூர் மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் போஸ் மலேசியா (Pos Malaysia) கிளைகளில் உள்ள, கட்டணச் சேவை மையங்கள் மூலமாகவோ செலுத்தலாம் என்றும், கோலாலம்பூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.