சீனா மற்றும் பிரேசில் போல இந்தியாவும் அமெரிக்காவை வரிகளால் கொல்கிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்காட் ஜென்னிங்ஸ் ரேடியோ நிகழ்ச்சியில்நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “சீனா வரிகளால் எங்களை கொல்கிறது,
இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசில் வரிகளால் எங்களை கொல்கிறது.அவர்களை விட வரிகளைப் பற்றி எனக்குநன்றாகத் தெரியும். உலகில் எந்த மனிதனை விடவும் வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இந்தியா தான் உலகில் அதிக வரி
விதிக்கும் நாடு. ஆனால் இப்போது அமெரிக்கா இனி மீது எந்த வரியும் இருக்காது என்று அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார். மேலும் ” இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு இல்லாவிட்டால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். அதனால் வரி விதிப்பு அவசியம். வரி விதிப்புஅமெரிக்காவிற்கு பேரம்பேசும் சக்தியை வழங்குகிறது” என்றார்.