Offline
Menu
பேஷன் ஜாம்பவான் ஜார்ஜியோ அர்மானி காலமானார்!
By Administrator
Published on 09/06/2025 09:00
News

கோலாலம்பூர்:

உலக பேஷன் துறையில், ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கிய, இத்தாலிய பேஷன் ஜாம்பவான் ஜார்ஜியோ அர்மானி (Giorgio Armani) தனது 91-ஆவது வயதில் காலமானார். அர்மானி நிறுவனத்தின் நிறுவனர், பேஷன், வாசனைத் திரவியங்கள், விளையாட்டு, ஹோட்டல்கள், ஹாலிவுட் ஆகிய துறைகளில், தனது முத்திரையைப் பதித்தார்.

ரெட் கார்ப்பெட்டில் (red carpet) ஒரு புதிய நேர்த்தியை உருவாக்கியதுடன், உடல் எடை குறைவாக உள்ள மாடல்களைத் தடை செய்து, நெறிமுறை ரீதியிலான தரங்களை அமைத்து, ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

டொனாடெல்லா வெர்சேஸ் (Donatella Versace), ஜூலியா ராபர்ட்ஸ் (Julia Roberts), ரஸ்ஸல் க்ரோவ் (Russell Crowe), பால் ஸ்மித் (Paul Smith), இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) உள்ளிட்டோர், அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இத்தாலியின் சிறந்த அடையாளமாக, அர்மானி திகழ்ந்ததாக, மெலோனி அவரை புகழ்ந்தார்.

நேர்த்தியான வடிவமைப்புகள், புதுமையான தோற்றத்திற்காக அறியப்பட்ட அர்மானி, தனது இறுதி நாட்கள் வரை, தொடர்ந்து பணியாற்றினார்.

2025-ஆம் ஆண்டில் கூட, தொலைதூரத்திலிருந்து, நிகழ்ச்சிகளை இயக்கினார். செண்டாயா (Zendaya), கேட் பிளான்செட் (Cate Blanchett), லேடி காகா (Lady Gaga) மற்றும் ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற, பல நட்சத்திரங்கள், அவரது வடிவமைப்புகளை அணிந்து, அவரது இடத்தைப் பேஷன் உலகில், உறுதியாக நிலைநிறுத்தின.

அவரது மரபு, வரும் தலைமுறைகளுக்கு, பேஷன் துறையை வடிவமைக்கும் என்பதில், சந்தேகமில்லை.

Comments