Offline
Menu
இந்தோனேசியாவில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்!
By Administrator
Published on 09/06/2025 09:00
News

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவின் பல நகரங்களில், ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல், கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்குள்ள மலேசியர்கள், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்தவரை, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் (Datuk Seri Mohamad Hasan) வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே,

இதுவரை, எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார். ஜாகர்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம், பெக்கான்பாரு, (Pekanbaru) மேடானில் (Medan) உள்ள துணைத் தூதரகங்கள், நிலைமையை, உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும், அமைதி மற்றும் நிலைத்தன்மை, மிகவும் முக்கியமானது என்றும், அவர் வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, தேசிய ஒற்றுமை, நிலைத்தன்மைக்குக் குந்தகம் விளைவிக்கும், போலித் தகவல்களுக்கு எதிராக, பொதுமக்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், முகமட் ஹாசான் நினைவூட்டினார்.

Comments