கோலாலம்பூர்:
இந்த ஆண்டு, 109,866 விண்ணப்பதாரர்களில், 78,883 பேர், அல்லது 71.8% விண்ணப்பதாரர்கள், யுபியூஆன்லைன் (UPUOnline) அமைப்பு மூலம், பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றுள்ளதாக, உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனிடையே, விண்ணப்பதாரர்களுக்கு மொத்தமாக, 1,132 இளங்கலைப் படிப்புகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, மாணவர் சேர்க்கை, அவர்களின் தகுதியின் அடிப்படையிலேயே, உறுதியானது.
மேலும், வாய்ப்புக் கிடைக்காதவர்கள், இன்று முதல், செப்டம்பர் 14 வரை, யுபிஇயூஆன்லைன் வழியாக, மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, உயர் கல்வி அமைச்சு வாழ்த்து தெரிவித்துக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வாய்ப்பை, தங்கள் படிப்பைத் தொடர, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாணவர்களை அறிவுறுத்தியது.