கோலாலம்பூர்:
சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA) திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரையிலான, மூன்று நாட்களில், ஐந்து புகார்கள் கிடைத்துள்ளன என்று, உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி (Datuk Armizan Mohd Ali) தெரிவித்தார்.
இதனிடையே, இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில், 8,438 கடைகளில் சோதனைகளும், 316 பொருட்களின் விலைகள், 1,160 இடங்களில், பொருட்களின் காலாவதி தினமும் சரிபார்க்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, அனைத்து விலை, விநியோகம் தொடர்பான புகார்களும், 24 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படும் என்று, அமைச்சர் கூறினார்.
சும்பங்கன் அசாஸ் ரஹ்மா திட்டம், 22 மில்லியன் மலேசியர்களுக்கு, RM100 ரிங்கிட் ஒருமுறை வழங்கப்படும் உதவித் தொகையாகும்.
இதற்கு, அரசாங்கம் கூடுதலாக, RM2 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம், இந்த ஆண்டிற்கான, மொத்த சும்பங்கன் துனாய் ரஹ்மா (STR), சும்பங்கன் அசாஸ் ரஹ்மா ஒதுக்கீடு RM15 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
இது, மலேசியாவின் வரலாற்றில், மிக உயர்ந்த உதவித் தொகை திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.