Offline
Menu
சிங்கப்பூர் எல்லைகளில் 1,500க்கு மேற்பட்ட மின்சிகரெட்டுகள் பறிமுதல்
By Administrator
Published on 09/07/2025 09:00
News

சிங்கப்பூர்:

செப்டம்பர் 1 முதல் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் அமலுக்கு வந்த நிலையில், முதல் நான்கு நாட்களிலேயே 1,500க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ICA) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஐசிஏ தனது செப்டம்பர் 4ஆம் தேதியிட்ட ஃபேஸ்புக் பதிவில், செப்டம்பர் 1 முதல் 4 வரை சோதனைச் சாவடிகளில் மின்சிகரெட்டுகள் தொடர்பான 123 சம்பவங்கள் பதிவாகியதாக தெரிவித்தது. இதில், சிலர் தாமாக முன்வந்து தங்களிடம் இருந்த மின்சிகரெட்டுகளை ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டது.

“இந்த சம்பவங்களில் சுமார் 70% குறுகிய கால அனுமதி பெற்றவர்களாகவும், 30% சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்டகால அனுமதி அட்டை பெற்றவர்களாகவும் உள்ளனர்,” என்று ஐசிஏ குறிப்பிட்டது.

அது மேலும், “சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகள் பயன்படுத்துதல், விற்பனை செய்தல், வைத்திருத்தல் அனைத்தும் சட்டவிரோதமானது. சிங்கப்பூருக்கு வரும் அல்லது இங்கு வாழும் வெளிநாட்டினரும் இந்த சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும்” என வலியுறுத்தியது.

இதற்குமுன், ஆகஸ்ட் 18 முதல் 22 வரை நடைபெற்ற தீவிர சோதனைகளில், 850க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் ஐசிஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

Comments