கோலாலம்பூரில், `நைட் என்போர்ஸ்மென்ட் ஆபரேஷன்’ (Operation Penguatkuasaan Malam – OPM) என்றழைக்கப்படும் இரவுநேர அமலாக்க நடவடிக்கையின் போது, எட்டு உணவகங்கள், சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், மூடுவதற்கு உத்தரவிடப்பட்டன.
இந்த நடவடிக்கை, தாமான் மாலூரி (Taman Maluri), ஜாலான் ராஜா போட் (Jalan Raja Bot) மற்றும் கம்போங் பாரு (Kampung Bharu) போன்றப் பகுதிகளில் நடைபெற்றது.
மேலும், பரிசோதனை செய்யப்பட்ட, 30 வணிக மையங்களில், கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL), 16 அபராதங்களை விதித்தது. இந்த அபராதங்கள், பணியாளர்களுக்கு டைபாய்டு தடுப்பூசி இல்லாதது, உணவு கையாளுதல் பயிற்சி இல்லாதது, சரியாகப் பராமரிக்கப்படாத எண்ணெய் வடிகட்டிகள், சமையலறையில் எலி மற்றும் கரப்பான் பூச்சி எச்சங்கள் கண்டறியப்பட்டது, வணிக உரிமம் இல்லாதது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக விதிக்கப்பட்டன.
எனவேதான், உணவக உரிமையாளர்கள், சுகாதாரத் தரங்களைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த, இந்த நடவடிக்கை தொடரும் என்று, கோலாலம்பூர் மாநகர் மன்றம் DBKL வலியுறுத்தியுள்ளது.