கோலாலம்பூர்:
காசாவில், இஸ்ரேல், தனது இராணுவத் தாக்குதலை அதிகரித்துள்ளது.
இதனிடையே, வசிப்பவர்களை வெளியேறுமாறு எச்சரித்த பின்னர், 12 மாடிகளைக் கொண்ட `முஷ்தாஹா டவர்’ (Mushtaha Tower) மீது, இஸ்ரேல் குண்டுவீசியது.
இதில், கட்டடத்தின் பெரும்பகுதி, இடிந்து தரைமட்டமானது.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz), தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “காசாவில் உள்ள, நரகத்தின் வாயிலிலிருந்து, பூட்டை நீக்க வேண்டும். அது திறக்கப்பட்டவுடன், மூடப்படாது” என்று எச்சரித்தார்.
இந்தத் தாக்குதல், காசாவில், மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதாக அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது.
அங்கு, ஏற்கனவே, ஆயிரக்கணக்கானோர், தொடர்ச்சியான குண்டுவீச்சுகளால், இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.