அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்தியாவுடன் வர்த்தக மோதலை துணிச்சலாக பார்க்கிறோம். ஏனென்றால் மிகப்பெரிய வாடிக்கையாளருடன் சண்டையிடுவது நன்றாக இருக்கிறது. ஆனால் இறுதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படும். விரைவில் அமெரிக்காதான் தேவை என்று சொல்வார்கள்.
50 சதவீத வரியை நீக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும். அவர்கள் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள். டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள். வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிக்கும்போது, மோடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்வார்”என்றார்.
அதேபோல் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில்,”இந்தியா விதிக்கும் அதிகபடியான வரியால் அமெரிக்க வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன். ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது. ரஷியாவின் போர் இயந்திரத்திற்கு உணவளிக்கிறது. போரில் உக்ரேனியர்கள், ரஷ்யர்கள் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோர் அதிகமாக செலவிடுகிறார்கள்.