Offline
Menu
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
By Administrator
Published on 09/08/2025 09:00
News

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்ப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு, முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழர்கள் எங்கே சென்றாலும் நமது மொழி, பண்பாடு, சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூக நீதி கோட்பாட்டை விடமாட்டோம். தமிழ்நாட்டின் பெருமையை எடுத்து சொல்கிற தூதுவர்களாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திகழ்கின்றனர். இங்கிலாந்து வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமற்ற தூதுவர்கள். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அரசின் அயலகத் தமிழர் நலன் துறை உழைக்கிறது. வாழ்வதும் வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும்.

சாதி, மதம், ஏழை பணக்காரன் போன்ற வேறுபாடுகள் நம்மை பிரிப்பதோடு வளரவும் விடாது. தமிழ் என்ற வேரில் வளர்ந்திருக்கும் நாம், நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்ககூடாது. தமிழ்நாட்டுக்கு வாருங்கள். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். சிறந்த உட்கட்டமைப்பு, அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என முதல்வர் கூறினார்.

Comments