Offline
Menu
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு; சாமானிய மக்களுக்கு பெரிய நிம்மதி: நிர்மலா சீதாராமன்
By Administrator
Published on 09/08/2025 09:00
News

புதுடெல்லி,மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது: “பிரதமர் மோடி எப்போதுமே மக்கள் சார்பு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துபவர், ஆகவே, இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை அவர் தொடருவார். ஜிஎஸ்டி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டை தவறாக வழிநடத்துகின்றன. ஜிஎஸ்டியில் 4 விகித முறை கொண்டுவந்தது பாஜகவின் தனிப்பட்ட முடிவு அல்ல, அதற்கான கமிட்டியால் எடுக்கப்பட்ட முடிவு.

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மூலமாக சாமானிய மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து முன்வந்துள்ளன. இந்திய நாட்டுக்கு இன்னும் திறன் வாய்ந்த எதிர்க்கட்சி இருந்தால் பொருத்தமாக இருக்கும். எதிர் தரப்பு தலைவர்கள் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளைக் குறித்து சுமத்தும் விமர்சனங்கள் தவறான தகவல்களின் அடிப்படையிலானது

ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை வரும் 22 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தொழில் மற்றும் வணிகத் துறையினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரி குறைப்பினால் ஏற்பட்ட பொருட்களின் விலை குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். எனவே, தொழில்துறை மற்றும் வணிகத்துறையினரிடம் இருந்து நான் நேர்மறைத்தன்மையைக் காண்கிறேன். நிச்சயமாக அவர்கள் விலையை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு பலனை அளிப்பார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.

Comments