ஜித்ரா,
கம்போங் சாங்க்லாங் அருகே ஜித்ரா பகுதியில் அறுவடை இயந்திரத்தில் சென்ற பல்கலைக்கழக மாணவன் முகமட் அம்ஸ்யார் முக்ரி மாஸ்ரி, 18 உயிரிழந்த நிலையில் இன்று காலை மீட்புக் குழுவால் சடலமாக கண்டெடுக்கப்பட்ட்டார். இயந்திரம் கவிழ்ந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் சடலம் மீட்கப்பட்டது.
இயந்திரத்தை நேற்று இரவு 11 மணிக்கு கிரேனின் மூலம் எடுத்து தேடிய பிறகு இன்று தேடுதல் பணிகள் விரிவுபடுத்தப்பட்டன. தேடும் பணியில் தீயணைப்பு, போலீஸ் மற்றும் மலேசிய சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் 4 படகுகள் பயன்படுத்தப்பட்டன ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு பாணி செயலாளர் நோர் அசார் தா ஜுதின் தெரிவித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காட்டிய பிறகு சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. முகமட் அம்ஸ்யார் மாஸ்ரி மூன்று நண்பர்களுடன் நேற்று அறுவடை இயந்திரத்தில் இருந்தபோது கவிழ்ந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் இரண்டு நண்பர்கள் தப்பித்தனர், மற்றவர் ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உதவியால் மீட்கப்பட்டார்.