Offline

LATEST NEWS

அரசாங்கம், புதிய பகடிவதை தடுப்பு சட்டத்தை உருவாக்க 6 மாத கால அளவு தேவை -துணை பிரதமர்
By Administrator
Published on 09/08/2025 09:00
News

கோலாலம்பூர்,

பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை பாதிக்கும் பகடிவதை மற்றும் பாலியல் தொந்தரவுகளை தடுக்க அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை 6 மாதத்தில் உருவாக்கும் முன்மொழிவுக்கு உத்தரவு வழங்கியுள்ளது, என துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நீதித்துறையின் வழி , நாடளாவிய ரீதியில் ஆலோசனை அமர்வுகள் நடத்தப்பட்ட பிறகு இந்த முன்மொழிவுகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் (PIBG), மாணவர் தங்கும் விடுதிகள், மற்றும் MRSM, ராயல் இராணுவ கல்லூரி போன்ற அமைப்புகளும் உள்ளடக்கப்படும் என்றார் அவர்.

இந்த சட்டம் புதிய மாணவர்களை குறிவைத்து நிகழும் தொந்தரவுகள், பயங்கர சம்பவங்கள், மிரட்டல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் முன்னர் நடைமுறையில் இருந்த மரபுகள் தொடராமல் தடுக்கும் வகையில் முன்மொழியப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கம் Penal Code (Amendment) Act 2025 (Act A1750) மூலம் தொந்தரவு, அச்சுறுத்தல், அவமதிப்பு மற்றும் மோசடி உள்ளிட்ட பல சம்பவங்கள் இணையத்தள வழியாக நடப்பதை உறுதி செய்து அதை, குற்றமாக வகைப்படுத்தி புதிய பிரிவுகள் 507B முதல் 507G வரை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments