ஜோகூர் பத்து பஹாட் அருகே வடக்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) KM78.7 இல் நேற்று இரவு லோரியுடன் மோதி விரைவுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், ஏழு பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர். இரவு 11.17 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும், 18 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் ஆயர் ஈத்தாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி நஸ்ருல் யுஸ்ரி யூசோஃப் தெரிவித்தார்.
ஐந்து டன் லோரியுடன் மோதியதில் விரைவுப் பேருந்து தீப்பிடித்ததாக அவர் கூறினார். 23 முதல் 48 வயதுக்குட்பட்ட பேருந்து ஓட்டுநர் உட்பட ஏழு ஆண்களுக்கு காயம் ஏற்பட்டதாக நஸ்ருல் கூறினார். அனைவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன, தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே வாகனத்தை விட்டு வெளியேறிவிட்டனர். 35 வயது லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் பிழைத்தார்.