கொழும்பு:இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.