Offline
Menu
பெண்களை அவதூறு செய்யும் ஆணாதிக்கத்திற்கு சின்மயி கடும் கண்டனம்
By Administrator
Published on 12/13/2025 09:00
Entertainment

பிரபல பின்னணிப் பாடகி சின்மயியை குறிவைத்து புதுப்புது சர்ச்சைகளை உருவாக்குவது அண்மைக்காலங்களில் வழக்கமாகி வருகிறது. சில தரப்பினர்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக அவர் பலமுறை வெளிப்படையாக கூறியும், தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

சமீபத்தில், சின்மயியின் புகைப்படங்களை சிலர் ‘மார்ஃபிங்’ செய்து அவதூறாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால் கடும் கோபம் அடைந்த அவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

“பெண்கள் எப்போதும் ஆண்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணமே ஆணாதிக்கச் சமூகத்தின் மனநிலை. அதற்கு இணங்காத பெண்கள் இழிவுபடுத்தப்படுவது, அல்லது செத்தாலும் பரவாயில்லை என நினைக்கும் கொடூர மனநிலையுடையவர்கள்தான் இப்படிப்பட்ட பதிவுகளை செய்கிறார்கள்,” என அவர் கூறினார்.

“முன்பு பேய் பிடித்தவள், வசியம் செய்தவள் என்று சொன்னவர்கள்… இன்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசமான படங்களை உருவாக்கி பெண்களை அவதூறு செய்வதே இவர்களின் வேலை,” என்றும் சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்துவதே இவர்களின் ஒரே செயல் என அவர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

Comments