Offline
Menu
“ஓஜி” இயக்குநருக்கு கார் பரிசளித்த பவன் கல்யாண்
By Administrator
Published on 12/19/2025 09:30
Entertainment

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் ‘ஓஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது. இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ‘ஓஜி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதனை முன்னிட்டு தற்போது இயக்குநர் சுஜித்துக்கு விலையுர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் பவன் கல்யாண்.

பவன் கல்யாண் கார் பரிசளித்தது தொடர்பாக இயக்குநர் சுஜித், “இதுவே சிறந்த பரிசு. இந்த பரிசினை சொற்களால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியும், நன்றியும் அடைந்துள்ளேன். எனது எனது அன்புக்குரிய ஓஜி கல்யாண் சாரிடம் இருந்து கிடைத்த ஊக்கமும், அன்பும் தான் எனக்கு எல்லாமே. சிறுவயது ரசிகனாக இருந்ததிலிருந்து இந்தச் சிறப்பான தருணம் வரை என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Comments