கோலாலம்பூர்:
மலேசியாவின் பிரபல நிறுவனமான மலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams), சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவும் நோக்கில், மலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams Group of Companies) நிறுவனம், யாயாசான் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் (Yayasan Sultan Ibrahim Johor)
அறக்கட்டளைக்கு 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை வழங்கியுள்ளது.
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களை இன்று நேரில் சந்தித்த மலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டத்தோ அப்துல் மலிக் தாஸ்தகிர், இந்த நன்கொடைக்கான காசோலையை வழங்கினார்.
மாமன்னர் அதனைத் தனது கரங்களால் நேரடியாகப் பெற்றுக் கொண்டார்.
மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, மலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் ஒரு முக்கிய உதவியைச் செய்துள்ளது: ஜோகூர் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் யாயாசான் சுல்தானா ரொகாயா (Yayasan Sultanah Rogayah) அறக்கட்டளைக்கு 1,00,000 ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை குறிப்பாக இந்திய சமூகத்திற்குத் தேவையான உதவிகளையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் இந்தச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மாமன்னரைச் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.