சிகாமாட்:
ஜோகூர், சிகாமாட் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர், அங்கு அமைக்கப்பட்டுள்ள 6 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தஞ்சம் புகுந்துள்ளனர்.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தகவல்படி, நேற்று இரவு 8 மணி முதல் இந்த மையங்கள் செயல்படத் தொடங்கின.
சிகாமாட்டில் உள்ள ஜாலான் ஜாபி – புக்கிட் தெம்புரோங் (Jalan Jabi–Bukit Tempurong) சாலையில் சுமார் 0.5 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் தேங்கியுள்ளதால், அந்தச் சாலை போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு முக்கிய ஆறுகள் ஆபத்தான மட்டத்தைத் தாண்டியுள்ளன: அவற்றில் சுங்கை மூவார் (கம்போங் அவாட், சிகாமாட்): 20 மீட்டர் (ஆபத்தான மட்டம்: 19.95 மீ), சுங்கை கிசாங் (கம்போங் ஸ்ரீ மாமோர், தங்காக்): 4.11 மீட்டர் (ஆபத்தான மட்டம்: 4.0 மீ).
மேலும், சுங்கை மூவார் (புலோ காசாப்), சுங்கை மூவார் (சிகாமாட் கெச்சில்), சுங்கை லெனிக் (பத்து பகாட்) உள்ளிட்ட நான்கு ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் (Warning level) உள்ளன.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (MetMalaysia) தகவலின்படி, சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 29, திங்கட்கிழமை) வரை தொடர் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.