Offline
Menu
2026 மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டு பிரச்சாரத்தை பிரதமர் தொடக்கி வைக்கிறார்
By Administrator
Published on 12/30/2025 09:00
News

கோலாலம்பூர்,

2026 மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டை தேசிய அளவில் அறிமுகப்படுத்தும் வகையில் I Lite U நிகழ்ச்சி வரும் ஜனவரி 3ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பெவிலியனில் நடைபெறவுள்ளது.

 

மடானி மலேசியா கொள்கையை பறைசாற்றும் வகையில் தேசிய அளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வை வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சு, சுற்றுலா,கலை, பண்பாட்டு துறை அமைச்சு, பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச துறை, கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட பல அமைப்புகளின் கூட்டு சேர்ந்துள்ளன.

 

இந்த பிரச்சாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவுள்ளதாக குறிப்பிட்ட வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், தேசிய சுற்றுலா பிரச்சாரத்தை ஆதரிக்கும் வகையில் ஆஸ்கார் விருது வென்ற நடிகை டான்ஸ்ரீ மிச்செல் இயோ பங்கு கொள்கிறார்.

 

பன்முகத்தன்மையையும்புக்கிட் பிந்தாங் மலேசியாவின் வசீகரத்தையும் வெளிப்படுத்துவதில் பிரகாசிக்கிறது.2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தின் ஓர் அங்கமான இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அவர் சொன்னார்.

 

20 படைப்பிரிவுகளின் அணிவகுப்போடு பல்வேறு உள்ளூர் கலைஞர்களின் நேரடி படைப்புகள் இடம்பெறுவதால் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பல முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். இந்த நிகழ்வு உள்ளூர், அனைத்துலக பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.

Comments