Offline
Menu
2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்? நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் வெளியாகி பரபரப்பு
By Administrator
Published on 01/01/2026 13:48
News

2025-ம் ஆண்டு முடிந்து 2026 தொடங்க உள்ளது. புதிய ஆண்டு என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை அறிய அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஜோதிடர்கள் 2026-ம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல பிரெஞ்சு ஞானி நாஸ்டர்டாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கணிப்புகள் வைரலாகி வருகின்றன.

எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய தனது புத்தகத்தில் பாடல் வடிவில் எழுதி உள்ளார். ஏற்கனவே ஹிட்லர் குறித்தும், பிரஞ்சு புரட்சி உள்பட பல நிகழ்வுகளை நாஸ்டர்டாமஸ் கணித்திருந்தார். பல இயற்கை பேரிடர்களையும் முன்கூட்டியே கணித்திருந்தார்.

.இந்த நிலையில் நாஸ்டர்டாமஸ் 2026-ம் ஆண்டில் பல கணிப்புகளை தெரிவித்திருக்கிறார்.அதன் அடிப்படையில், 2026-ம் ஆண்டு 3-ம் உலகப் போரின் அபாயம் அதிகரிக்கலாம் என்ற கருத்துகள் கூறப்படுகின்றன. உலகளாவிய அளவில் பெரும் மோதல்கள் உருவாகி, அது மிகுந்த அழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

2026-ம் ஆண்டில் கடற்படை அல்லது கடல்சார் பகுதியில் ஒரு பெரிய சம்பவம் உலக கவனத்தை ஈர்க்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் தவறான அரசியல் அல்லது ராணுவ முடிவு காரணமாக கடல்சார் பதற்றம் திடீரென அதிகரித்து, முக்கிய நாடுகளுக்கிடையே மோதல் சூழல் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இந்த பதற்றத்தின் உச்சமாக ஒரு பெரிய கப்பல் மூழ்கடிக்கப்படும் சம்பவம் நிகழக்கூடும் என்றும், அது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 2026-ம் ஆண்டில் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முக்கிய உலக வல்லரசுகள் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பிற்கு செல்லும் சூழல் உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கடி வேலைவாய்ப்பு இழப்பு, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை அதிகரித்து, சமூக அமைதியின்மையை உருவாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய நாடு அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாராகும் சூழல் உருவாகலாம் என்றும், இதனால் உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் தாக்கம் மனித விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களிலும் பிரதிபலித்து, செவ்வாய் கிரக ஆய்வுகள் உள்ளிட்ட முயற்சிகள் தடைபடலாம் என்றும் அவர் கணித்துள்ளதாக தெரிகிறது.2026-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உலகின் பல துறைகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இவை தீர்க்கதரிசனங்களாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றும், நவீன கால உலக அரசியல் சூழலே எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments