Offline
Menu
சூரியுடன் இணையும் மிதுன்
By Administrator
Published on 01/01/2026 14:05
Entertainment

வளர்ந்துவரும் இளம் நடிகர் மிதுன் ஜெய்சங்கர் ‘மண்டாடி’ படத்தில் சூரியுடன் இணைந்துள்ளார்.

‘ஆவேசம்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மிதுன். இவர் தற்போது சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தில் இணைந்துள்ளார். ‘செல்ஃபி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் படம் இது.

சூரியுடன் மகிமா நம்பியார், சத்யராஜ், சுகாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்படும் படம் என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்ப பொருத்தமாக நடிகர்களைத் தேர்வு செய்தாராம் இயக்குநர் மதிமாறன்.

“ஒவ்வொரு காட்சியும் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.

“கதைப்படி, படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அனுபவமுள்ள இளம் நடிகர் ஒருவர் தேவைப்பட்டார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் மிதுன் ஜெய்சங்கர் நடிப்பு படம் பார்ப்போர் உள்ளத்தைத் தொடும் வகையில் அமைந்திருந்தது. எனவே அவரைத் தேர்வு செய்தோம்,” என்று இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.

Comments