Offline
Menu
வளமான ஆண்டாக அமையட்டும்: நடிகர் அஜித் புத்தாண்டு வாழ்த்து
By Administrator
Published on 01/01/2026 14:09
News

சென்னை,2025 ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெற்று, 2026 ஆம் ஆண்டு நாளை பிறக்கிறது. புதிதாக பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாகவும், உங்கள் வாழ்க்கை அழகானதாகவும் அமைய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் தனது மகளுடன் அஜித் சாமி தரிசனம் செய்தார். கொங்குநாடு ரைபிள் கிளப்பில் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவும் வைரலாகியிருந்த்து.

Comments