Offline
Menu
‘‘தனியாக வாழ்வதே மகிழ்ச்சி”- பாலிவுட் நடிகர் சல்மான் கான்
By Administrator
Published on 01/03/2026 00:40
Entertainment

மும்பை,பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கட்டுடல் கொண்ட கதாநாயகனாக வலம் வரும் சல்மான் கான் தற்போது ‘கல்வான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான்கான், இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் ‘முரட்டு சிங்கிள்’ ஆகவே வலம் வருகிறார். பல முன்னணி நடிகைகளுடன் காதலில் இருந்தாலும், அனைத்தும் தோல்வி கண்ட நிலையில் தற்போது தனிமரமாகவே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.

இதுகுறித்து நண்பர்கள் கேட்டாலும், நிகழ்ச்சிகளில் கேள்விகள் கேட்கப்பட்டாலும், ‘‘தனிமையாக ஜாலியாகவே இருக்கிறேன். பின்னர் எதற்கு தேவையற்ற விஷயங்களில் சிக்கிக்கொள்ள வேண்டும்” என்று கூலாக பதிலளிக்கிறாராம். சல்மான் கானின் இந்த போக்கு திரையுலகை கவனிக்க வைத்துத்தான் வருகிறது.

Comments