இந்தக் கும்பல் குறைந்த தரமான பொருட்களைப் பிரபல நிறுவனங்களின் பெயரில் பேக் செய்து சந்தையில் விற்று வந்துள்ளது. போலி பால் தயாரிப்பு மட்டுமின்றி, வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
வியட்நாம் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில், இந்த போலி பால் பொருட்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பது கண்டறியப்பட்டது. கடந்த ஓராண்டாகத் தலைமறைவாக இருந்த இக்குழுவின் தலைவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தென்கிழக்கு ஆசியாவில் உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கத் தீவிர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.