ஆசிய காற்பந்து கூட்டமைப்பு (AFC) இன்று வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், மலேசியாவின் ஜோகூர் டாருல் தஜிம் (JDT) கால்பந்து அணி தென்கிழக்கு ஆசியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது மலேசிய கால்பந்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.
கிளப்பின் உரிமையாளர் துங்கு இஸ்மாயில், வீரர்களின் கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் இது ஒரு சான்று என்று பாராட்டியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகளே இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.