பினாங்கு முதல் பாலம் வரும் ஞாயிற்றுக்கிழமை பராமரிப்பு பணிகளுக்காக நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இரண்டாவது பாலத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மின்சாரக் கம்பிகளைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவசர ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்து வாரியம் தெரிவித்துள்ளது.