2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுப் போட்டியின் 'சிறந்த படம்' (Best Picture) பிரிவில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ள 201 படங்களின் பட்டியலை அகாடமி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: சாப்டர் 1' மற்றும் 'டான்வி தி கிரேட்' உள்ளிட்ட 5 படங்கள் தகுதி பெற்றுள்ளன.
இது இறுதிப் பரிந்துரை பட்டியல் அல்ல என்றாலும், உலகத்தரம் வாய்ந்த படங்களுடன் இந்தியப் படங்கள் போட்டியிடுவது இந்திய சினிமாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது. வரும் ஜனவரி 22-ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகும் போது, இதில் எந்தப் படங்கள் ஆஸ்கார் மேடைக்குச் செல்லும் என்பது தெரியும்.