நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் மேகா ஆகாஷ் இணையும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. ஆக்ஷன் படங்களிலிருந்து சற்று விலகி, விஜய் ஆண்டனி இதில் ஒரு முழுநீள காதல் கதையில் நடிக்கிறார். இப்படத்திற்கு அவரே இசையமைப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. ஒரு எளிய மனிதனின் காதல் மற்றும் இசைப் பயணத்தை மையமாகக் கொண்ட இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.