Offline
Menu
’விவாகரத்து முடிவை மாற்றிய படம்’….- சிரஞ்சீவி நெகிழ்ச்சி
By Administrator
Published on 01/18/2026 09:00
Entertainment

சென்னை,`மன சங்கர வர பிரசாத் காரு’ படம் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியின் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

“கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டையில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்பது உண்மைதான். படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியை தங்கள் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருக்கிறது. இப்போது அவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். படம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 190 கோடி வசூல் செய்துள்ளது.

Comments