Offline
Menu
ETS இரயில் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி: KTMB-இன் அதிரடி சலுகை!
By Administrator
Published on 02/15/2026 17:38
News

கோலாலம்பூர், பிப்ரவரி 15, 2026:

பண்டிகைக் காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகவும் மலிவாகவும் பயணம் செய்ய உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட ETS பயணங்களுக்குக் கட்டணக் குறைப்பை KTMB அறிவித்துள்ளது.

இந்த சலுகை பிப்ரவரி 15 (இன்று) முதல் பிப்ரவரி 22, 2026 வரை அமலில் இருக்கும் என்றும், இதனை செயற்படுத்திக்கொள்ள ETSANGPOW20, ONGTRAIN20 ஆகிய இரு புரோமோ கோடுகளை (Promo Codes) அது அறிமுகப்படுத்தியுள்ளது.

மொத்தமாக 5,000 புரோமோ கோடுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எனவே, “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற அடிப்படையில் இது வழங்கப்படும்.

பயணிகள் இன்று முதல் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பின்வரும் வழிகளில் வாங்கலாம்:

KITS அலைபேசி செயலி.

KTMB அதிகாரப்பூர்வ இணையதளம்.

இரயில் நிலையங்களில் உள்ள சுயசேவை இயந்திரங்கள் (Kiosk machines).

“இந்த 20 சதவீதத் தள்ளுபடி, பண்டிகைக் காலங்களில் பயணிகளின் செலவைக் குறைக்க உதவும். அதே வேளையில், சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கள் இலக்கை அடைய இது ஒரு சிறந்த மாற்றாக அமையும்” என்று , KTMB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்லான் ஷா அல்-பக்ரி கூறினார்.

எனவே, பொதுமக்கள் இந்த மட்டுப்படுத்தப்பட்ட காலச் சலுகையைப் பயன்படுத்தி முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு 03-9779 1200 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Comments