Offline
Menu
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்
By Administrator
Published on 02/15/2026 17:52
Entertainment

கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளது.

கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘டான்’ பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுத்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தைராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் படமாக இருக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியாகும் பட்சத்தில் அமரன் பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

Comments