கோலாலம்பூர்,
தேசிய சேவை பயிற்சித் திட்டம் (PLKN 3.0) தொடர் 2-க்கான 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள், தங்களின் தேர்வு நிலையை இன்று முதல் ஆன்லைன் வாயிலாகச் சரிபார்க்கலாம் என்று தேசிய சேவை பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
பயிற்சியாளர்கள் தங்களின் தேர்வு நிலையைத் தெரிந்துகொள்ள பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
அதிகாரப்பூர்வ ePLKN 3.0 இணையதளத்தின் வாயிலாகச் சரிபார்ப்புகளை மேற்கொள்ளலாம்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட அனைத்துப் பயிற்சியாளர்களும் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தங்களின் வருகையை அதே இணையதளத்தின் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். சீரான பதிவு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை உறுதி செய்யவே இந்த வருகை உறுதிப்படுத்தல் கோரப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பயிற்சித் தொடர்களுக்கான அறிவிப்புகள் மற்றும் தேதிகள் குறித்த விபரங்கள் அவ்வப்போது கட்டம் கட்டமாக வெளியிடப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர், தேசிய சேவை பயிற்சித் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணையதளத்தைத் தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் உரிய காலக்கெடுவுக்குள் தங்களின் பதிவை உறுதி செய்துகொள்வது அவசியமாகும்.