Offline
Menu
பாலத்திலிருந்து விழுந்த மகளைக் காப்பாற்ற முடியவில்லை என்று 77 வயது தந்தை வேதனை
By Administrator
Published on 07/04/2026 12:00
News

டுங்குன்: பண்டார் அல்-முக்தாஃபி பில்லா ஷா அருகே உள்ள தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சுங்கை பாக்கா பாலத்திலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படும் 47 வயது பெண் இன்று நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட அப்பெண்ணின் தந்தை, 77 வயதான தின் ஜகாரியாவால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று டுங்குன் காவல் துறைத் தலைவர் நிக் அப் ஹலீம் நிக் மாட் கூறினார்.

அவரது மகள், 47 வயதான நார் ஹஸ்லினி டிம், காலை 10.30 மணிக்கு, தனது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாலத்திலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது. வலுவான நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறதுஎன்று காவல்துறை கூறியது. ன்அப்பெண்ணின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Comments