நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீராமராக நடிக்கும் பிரம்மாண்ட புராணத் திரைப்படமான 'ராமாயணம்' (Ramayana), அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சினிமார்க்கில் முதல் சோதனைத் திரையிடல் (Test Screening) செய்யப்பட்டது. 18 முதல் 60 வயது வரையிலான பார்வையாளர்களுக்காக நடத்தப்பட்ட இந்தச் சிறப்புத் திரையிடலில், படத்தின் பிரம்மாண்டம் மற்றும் காட்சி அமைப்புகளுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தைப் பார்த்த பார்வையாளர்கள், இதன் உணர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) சர்வதேசத் தரத்தில் இருப்பதாகப் பாராட்டியுள்ளனர். இந்தியாவில் இப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், இந்த ஆரம்பக்கட்ட விமர்சனங்கள் படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளன.