Offline
Menu
யூத் படக்குழுவை நேரில் அழைத்து சூர்யா - கார்த்தி செய்த விஷயம்
By Administrator
Published on 03/25/2026 15:13
Entertainment

கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் கடந்த மார்ச் 19ம் தேதி திரைக்கு வந்திருந்தது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தற்போது ரூ.30 கோடியை வசூல் கடந்து இருக்கும் நிலையில் 50 கோடி என்ற மைல்கல்லை யூத் படம் தொடுமா என எதிர்பார்ப்பு இருக்கிறது.

சூர்யா - கார்த்தி பாராட்டு

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பி கார்த்தி இருவரும் யூத் படத்தை பார்த்து மொத்த படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டி இருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. அதற்கு யூத் படத்தின் தயாரிப்பாளர் நன்றி கூறி இருக்கிறார்.

Comments