Offline
Menu
இந்திய சினிமாவின் 10வது ரூ. 1000 கோடி திரைப்படம்
By Administrator
Published on 03/26/2026 13:58
Entertainment

இந்திய சினிமாவின் 10வது ரூ. 1000 கோடி திரைப்படம்.. துரந்தர் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ரூ. 1000 கோடி வசூல்

இந்திய சினிமாவில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. விமர்சன ரீதியாக பல்லாயிரம் திரைப்படங்கள் வெற்றிபெற்றிந்தாலும், ரூ. 1000 கோடி வசூல் என்கிற மைல்கல்லை சில திரைப்படங்களால் மட்டுமே எட்ட முடிந்தது.

தங்கல், பாகுபலி 2, புஷ்பா 2, ஜவான், பதான், துரந்தர், கே.ஜி.எப் 2, கல்கி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய 9 திரைப்படங்கள் மட்டுமே இந்திய சினிமாவில் இருந்து இதுவரை உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அந்த பட்டியலில் தற்போது துரந்தர் 2 திரைப்படமும் இணைந்துள்ளது.

ஆம், கடந்த வாரம் வெளிவந்த துரந்தர் 2 திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்த 7 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்திய சினிமாவில் 10வது ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் என்கிற பெருமையும் இப்படத்தையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments