மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1:00 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, சிலாங்கூர்: சபாக் பெர்ணாம் (Sabak Bernam), கோலா சிலாங்கூர் (Kuala Selangor), கிள்ளான் (Klang), கோம்பாக் (Gombak), கோலா லங்காட் (Kuala Langat) மற்றும் உலு லங்காட் (Hulu Langat), கோலாலம்பூர்: கூட்டரசு பிரதேசம் முழுவதும், பேராக்: பாகான் டத்தோ (Bagan Datuk) மற்றும் ஹிலிர் பேராக் (Hilir Perak), நெகிரி செம்பிலான்: ஜெலுபு (Jelebu) பகுதி மற்றும் சரவாக்: காபிட் (காபிட், புக்கிட் மாபோங் மற்றும் பெலகா), மிரி (பெலுரு, தெலாங் உசான் மற்றும் மருடி) மற்றும் லிம்பாங் (Limbang) ஆகிய இடங்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் வரை இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.