ஃபார்முலா 1 (Formula 1) உலகில் ரெட் புல் (Red Bull) அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் நீண்டகால ரேஸ் இன்ஜினியரான ஜியான்பியரோ லம்பியாஸ், ரெட் புல் அணியிலிருந்து விலகி மெக்லாரன் (McLaren) அணியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெர்ஸ்டாப்பன் தனது காரில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகளால் அதிருப்தியில் இருக்கும் வேளையில், இந்த விலகல் அவருக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தோல்விகளால் மனமுடைந்துள்ள அவர், கார் சரியான தரத்தில் இல்லையென்றால் தான் ஓய்வு பெறுவதைப் பற்றி யோசிக்க நேரிடும் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், மெக்லாரன் அணிக்கு லம்பியாஸின் வருகை பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. ரெட் புல் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த ஒருவர் விலகுவது, வரும் 2027-ம் ஆண்டு புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது அந்த அணியின் ஆதிக்கத்தை மாற்றியமைக்கலாம் என்று கருதப்படுகிறது.