Offline
Menu
குவா மூசாங்கில் 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒரு பெண் உட்பட 5 பேர் காயம்!
By Administrator
Published on 06/05/2026 10:00
News

குவா மூசாங்:

இன்று மதியம் 12.23 மணியளவில் டமாய் குவாரிக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், மற்ற நால்வருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விபத்தில் புரோடுவா அடிவா (Perodua Ativa), டொயோட்டா வயோஸ் (Toyota Vios) மற்றும் புரோடுவா அல்சா (Perodua Alza) ஆகிய மூன்று கார்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அங்கிருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று, குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் அஸ்ருல் இஜ்ஹாம் சுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

Comments