Offline
Menu
கோலாலம்பூர்: உணவகத்தில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வெளிநாட்டவர் கைது!
By Administrator
Published on 06/06/2026 11:00
News

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பெண்ணிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட 33 வயது வெளிநாட்டு ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு, ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஓர் உணவகத்திற்கு 31 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மதுபோதையில் இருந்த அந்த வெளிநாட்டு நபர், அப்பெண்ணைப் பார்த்து ஆபாச சைகைகள் செய்ததோடு அநாகரிகமாகவும் நடந்துகொண்டுள்ளார்.

இதனால் பெரும் அச்சமடைந்த அப்பெண், மறுநாள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், பிரிக்பீல்ட்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து சம்பந்தப்பட்ட நபரைத் தீவிரமாகக் கைது செய்தனர்.

மேலும், நீதிமன்ற அனுமதியோடு அவர் தற்போது நான்கு நாட்கள் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் முறையான ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது,” என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்துள்ளார்.

Comments