Offline
Menu
அதிக காலம் பிரதமர் பதவியை தொடர்ந்து வகித்து மோடி சாதனை: அன்புமணி வாழ்த்து
By Administrator
Published on 06/11/2026 09:00
News

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து 4,399 நாள்கள் வகித்ததன் மூலம் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சாதனையை நரேந்திர மோடி படைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி முதல் 1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி வரை தொடர்ந்து 4,398 நாள்கள் பதவி வகித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி தொடங்கி இன்று 4,399-ம் நாளாக பிரதமர் பதவியில் தொடர்வதன் மூலம் மோடி புதிய சாதனை படைத்துள்ளார்.

12 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது, உட்கட்டமைப்புகளையும், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியது என பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு பல அடையாளங்கள் உள்ளன. இந்தியாவை பசியும், வறுமையும் இல்லாத, அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற வல்லரசாக மாற்றும் முயற்சியிலும் அவர் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Comments