Offline
Menu
AwAS கேமரா பராமரிப்புச் செலவு RM112,800 மட்டுமே- அந்தோனி லோக் நாடாளுமன்றத்தில் விளக்கம்
By Administrator
Published on 07/04/2026 10:00
News

மலேசியாவின் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பான ‘அவாஸ்’ (AwAS) வேகக்கட்டுப்பாட்டு கேமராக்களின் ஆண்டு பராமரிப்புச் செலவு குறித்து நிலவி வரும் தவறான தகவல்களைப் மறுத்து போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு கேமராவைப் பராமரிக்க 337,000 ரிங்கிட் செலவிடப்படுவதாக கூறப்படும் புள்ளிவிவரம் தவறானது என்றும், அதன் உண்மையான ஆண்டு பராமரிப்புச் செலவு 112,800 ரிங்கிட் மட்டுமே என்றும் அவர் நேற்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

செத்தியூ நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த 112,800 ரிங்கிட் தொகையானது கேமராவின் பாதுகாப்புப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் காலமுறை அளவீட்டுப் பணிகளை மட்டுமே உள்ளடக்கியது என்றும், பரவலாகக் குறிப்பிடப்படும் பெரிய தொகை ஒட்டுமொத்தப் பின்னணி அலுவலகக் கட்டமைப்பு மற்றும் சமன் அச்சிடும் செலவு போன்ற ஒட்டுமொத்தச் கட்டமைப்பை குறிக்கிறது என்றும் விளக்கினார்.

இத்திட்டத்தின் வெற்றியை நிதி வருவாயை மட்டும் கொண்டு அளவிட முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், கேமராக்கள் உள்ள இடங்களில் தங்களின் விதிமீறல் கண்டறியப்படும் என்ற பயம் வாகன ஓட்டிகளிடையே 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக நிலவுவதால், விபத்து அபாயங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாகவும், இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யத் தணிக்கைக்குத் தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Comments