Offline
Menu
500,000 ரிங்கிட் மதிப்பிலான கவர்ச்சிகரமான பரிசுகளுடன் Prime Bonanza குலுக்கல்
By Administrator
Published on 07/04/2026 10:00
News

உயர்கல்வி அமைச்சின் (KPT) கீழுள்ள ஒரு முகவர் அமைப்பான தேசிய உயர்கல்வி நிதி வாரியம் (PTPTN), Simpan SSPN மூலமாக மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வலுப்படுத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Cabutan Prime Bonanza குலுக்கல் உட்பட பல்வேறு தொடர் ஊக்குவிப்பு முயற்சிகள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

மலேசியத் தலைமுறையினரின் கல்வி எதிர்காலத்திற்காக, தங்களின் முதன்மை Simpan SSPN Prime திட்டத்தைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரும் வைப்பீட்டாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக PTPTN இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இந்த குலுக்கலில் 106 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த குலுக்கல் பிரச்சாரம், Simpan SSPN Prime வைப்பீட்டாளர்களுக்காக பிளாட்டினம் (Platinum), கோல்டு (Gold) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி 2026 ஜூலை 1 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும். மொத்தம் 106 வெற்றியாளர்களுக்கு கிட்டத்தட்ட RM500,000 மதிப்பிலான கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன.

பரிசு விவரங்கள் பின்வருமாறு:வெற்றியாளர் -பிளாட்டினம் பிரிவு (Kategori Platinum):

முதன்மை பரிசு (1 வெற்றியாளர்) – Jaecoo J7 2WD PHEV கார்.

இரண்டாவது பரிசு: (1வெற்றியாளர்) – RM50,000 ரொக்கம்.

மூன்றாவது பரிசு: (1வெற்றியாளர்) – RM30,000 ரொக்கம்.

ஆறுதல் பரிசு: 50 பேருக்கு தலா RM1,000 ரொக்கம்.

கோல்டு பிரிவு (Kategori Gold) முதல் பரிசு: (1 வெற்றியாளர்) – PROTON X50 Flagship. PHEV கார் (1 வெற்றியாளர்)Proton X50 Flagship கார்.

இரண்டாவது பரிசு (1வெற்றியாளர்) – RM30,000 ரொக்கம்.

மூன்றாவது பரிசு: (1 வெற்றியாளர்)- வெற்றியாளர்)RM10,000.

ஆறுதல் பரிசு தலா RM500 ரொக்கம் (50 வெற்றியாளர்கள்).

Comments