கடந்த 2026 ஜூன் 27 முதல் MADANI அரசாங்கம் RM23 மில்லியனுக்கும் அதிகமான மானியத்தை வழங்கியுள்ளது.
2026 ஜூலை 4 ஆம் தேதி வரை, டீசலில் இயங்கும் பிக்கப் மற்றும் ஜீப் வாகனங்களின் உரிமையாளர்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு BUDI MADANI Diesel (BUDI Diesel) திட்டத்தின் கீழ் மாதந்தோறும் கூடுதலாக 100 லிட்டர் டீசல் மானியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 2026 ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதத்திற்கு மொத்தம் 300 லிட்டர் டீசல் மானிய ஒதுக்கீடு கிடைக்கும்.
இதில், மலேசிய தீபகற்பத்தில் 1.74 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களும், சபா, சரவாக் மற்றும் லபுவான் கூட்டாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த 22,000-க்கும் அதிகமான மலேசியர்களும் அடங்குவர்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கிராமப்புற மற்றும் உள்பகுதிகளுக்கான பயணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக பிக்கப் மற்றும் ஜீப் வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.