Offline
Menu
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி: அந்தோணி லோக் மறுப்பு!
By Administrator
Published on 07/25/2026 15:00
News

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசாராக DAP தேசியச் பொது செயலாளர் அந்தோணி லோக் (Anthony Loke) நியமிக்கப்படலாம் என்ற குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகளின் ‘தீய நோக்கிலான வதந்திகள்’ என அவர் மறுத்துள்ளார்.

பாக்காத்தான் ஹரப்பான் (PH) கூட்டணியின் மந்திரி பெசார் வேட்பாளர் தற்காலிக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் (Tok Min) மட்டுமே என

மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மந்திரி பெசார் பதவிக்கு மலாய் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே தகுதியுடையவர் என்பதால், அத்தகுதி தனக்கு இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

லிங்கி தொகுதியில் அமினுடின் தோல்வியடைந்தால் மந்திரி பெசார் யார் என்ற UMNO பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி சுடுகியின் (Asyraf Wajdi Dusuki) கேள்விக்குப் பதிலளித்த அவர், எதிர்கட்சிகளின் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

Comments