தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) நிறுவனத்தின் ‘ஹிபா’ (Hibah) நிதிப்பயன் வழங்கல் தொடர்பான மோசடி வழக்கில், அதன் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அஸீஸ் அப்துல் ரஹீம் மற்றும் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல் விதித்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையினர் தாக்கல் செய்த தடுப்புக் காவல் மனுவை விசாரித்த, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முகமது அஃபிக் சுபேர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இவ்வழக்கில் அஸீஸ் ரஹீமுடன் சேர்த்து, தபூங் ஹாஜி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் முன்னாள் தலைமை நிதியதிகாரி (CFO) ஆகியோரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகள் முடிந்த பின்னர், இவர்கள் மீது முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.