Offline
Menu
குளுவாங் தீ விபத்தில் தாய் உட்பட இரு பிள்ளைகள் உயிரிழப்பு
By Administrator
Published on 09/11/2026 13:00
News

இங்குள்ள தாமான் தித்திவாங்சா, ஜாலான் சாத்ரியா 7/5-இல் அமைந்த இரட்டை மாடி மாடிவீடு ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித குற்றவியல் அம்சங்களோ அல்லது சதியோ இல்லை எனப் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் 49 வயது பெண்மணி மற்றும் அவரின் 18, 11 வயதுடைய இரு மகன்கள் பரிதாபமாகத் தீயில் கருகி உயிரிழந்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் குளுவாங் மாவட்டத் துணைப் காவல் துறைத் தலைவர் சுபரின்டென்டன் நிக் முகமட் அஸ்மி ஹுசின் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக எஞ்சே பெசார் ஹாஜா கல்சோம் (Enche’ Besar Hajjah Khalsom) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்து மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Comments